கொல்கத்தா: காங்கிரஸ் விரும்பினால் நாம் அனைவரும்  ஒன்றிணைந்து  2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ளலாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

நடைபெற்று முடிந்த உ.பி. உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, 2022ல் நாம் பெருமளவில் வெற்றியைக் குவித்துள்ளோம். எனவே, 2024 மக்களவையிலும் நாம்தான் ஆட்சியமைப்போம்” எனத் தெரிவித்தார். பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க முதல்வரும், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருபவருமான மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சி விரும்பினால் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இப்போதைக்கு ஆக்ரோஷமாக இருக்க வேண்டாம், நேர்மறையாக இருங்கள். இந்த 4 மாநில சட்டசபை தேர்தல் வெற்றி எதிர்காலத்தில் பா.ஜ.க.வுக்கு பெரும் இழப்பாக அமையும். இந்த தேர்தல் முடிவுகள் 2024 தேர்தலின் தலைவிதியை தீர்மானிக்கும் நடைமுறைக்கு மாறானது என்று கூறியவர், எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்றும் குற்றம் சாட்டினார்.

உ.பி.யில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் கடந்த தேர்தலை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. இந்த தேர்தலில் , இந்த முறை அகிலேஷ் யாதவின்  சமாஜ்வாதி கட்சிக்கு வாக்கு சதவீதம் 20% லிருந்து 37% ஆக அதிகரித்துள்ளது.  சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தோல்வியால் சோர்ந்துவிடாமல், எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரம் முறைகேடு குறித்து, தடயவியல் சோதனைகளை நாட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

2024 பாராளுமன்ற தேர்தலை மாநில தேர்தல் வெற்றிகள் தீர்மானிக்காது! பிரசாந்த் கிஷோர் டிவிட்…