திருச்சி:

ச்சநீதி மன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழகம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடைபெறும் என்று, பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும்,  மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய முன்வந்தால், நானும் தயார் என்றும் கூறினார்.

காவிரி மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 16ந்தேதி உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில்,  தமிழகத்திற்கு தண்ணீர் குறைத்தும், அதை கர்நாடகாவுக்கும் வழங்கும் விதமாகவும் கூறி உள்ளது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசுக்கு  உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று திருச்சி வந்த பாமக இளைஞர் அணி தலைவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி,  தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்தால்,  தானும் ராஜினாமா செய்ய தயார் என கூறினார்.

மேலும்,  மார்ச் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் 30ம் தேதி தமிழகம் முழுவதும் ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராட்டம் நடைபெறும் என்றார்.