ம.தி.மு.கவில் இருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு அக் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இன்னோவா கார் ஒன்றை அன்பளித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அமைதி காத்த நாஞ்சில் சம்பத், சசிகலா பொதுச்செயலாளர் ஆனதை அடுத்து அதிருப்தியில் இருந்ததாய் செய்தி வெளியானது. அப்போதைக்கு அவர் சார்பாக சிலர் மறுப்பு தெரிவித்தனர்.

ஆனால் தனக்கு அளிக்கப்பட்ட இன்னோவா காரை இன்று திருப்பி அளித்தார் நாஞ்சில் சம்பத்.

அப்படிப்பட்ட இன்னோவா காரை நாஞ்சில் சம்பத் தற்போது திருப்பி கொடுத்துள்ளார். “சசிகலாவுக்கு பொதுச்செயலாளர் பதவி வகிக்க தகுதி இல்லை” என்றார்.

இந்த நிலையில், செங்கல்பட்டுக்கு வந்த நாஞ்சில் சம்பத் தனியார் தொலைகாட்சி செய்தியாளரிடம் பேசினார். அப்போது, “சசிகலாவுக்கு தகுதி இல்லை. காரை திருப்பிக் கொடுத்துவிட்டேன்” என்றெல்லாம் சொன்னார். அதே நேரம் ‘அதிமுகவில் இருந்து அழைப்பு வந்தால் செல்வீர்களா..?’ என்று கேட்டதற்கு, “அழைத்தால் நிச்சயம் சென்று பார்ப்பேன்’ என்றார.

ஆக, நாஞ்சில் சம்பத் எந்த “மோடில்” இருக்கிறார் என்பது புதிராக உள்ளது.