பெங்களூரு: ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.6 கோடி பரிசு என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த பரிசு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் செல்லும் கன்னர்களுக்கு ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.
‘கர்நாடக ஒலிம்பிக் – 2025’ விருது வழங்கும் விழா பெங்களூரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் சித்தராமையா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசும்போது, “காங்கிரஸ் அரசு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. அதனால் கர்நாடக மாநிலத்தவர்கள் அதிகம்பேர் விளையாட்டுகளில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியனார். கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வென்றால் 4 கோடி ரூபாயும், வெண்கல பதக்கம் வென்றால் 3 கோடி ரூபாயும் பரிசாக தரப்படும் என்றார்.
இந்த அறிவிப்பானதுழ, விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு என்றவர், கர்நாடக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வர் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார். மேலும், பேசிய அவர், “அரசு வேலைகளில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. காவல்துறையில் 2 சதவீதமும் வனத்துறையில் 3 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, விளையாட்டு துறையில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
2028 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]