சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்கள் வரி மற்றும் கட்டண விவரங்களை அறிய புதிய அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, சொத்து வரி கட்ட கியூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படம் என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

சென்னை மாநகராட்சி நடப்பாண்டில் அடுத்த அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்த அறிவுறுத்தி உள்ளது. இதற்கான ஆஃபரையும் அறிவித்தது. இந்த நிலையில், சொத்து உரிமையாளர்களுக்கு  விரைவில் அடையாள அட்டை  வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அந்த அடையாள அட்டையில், ஒவ்வருவரு டைய சொத்து   விவரங்கள் மற்றும், சொத்து உரிமையாளர்களின் பெயர்கள், சொத்து வரி ஐடி மற்றும் QR குறியீடு ஆகியவை இடம் பெற்றிருக்கும், பயனர்கள், அட்டையிய்ல உள்ள கிஆர் கோட்டை  ஸ்கேன் செய்யும்போது, அவர்கள் செலுத்த வேண்டிய  சொத்து வரி, நிலுவைத் தொகை மற்றும் இதற்கு முன்பு செலுத்திய தொகை போன்ற அனைத்து விவரங்களும் தெரிய வரும் என்றும் இந்த அடையாள அட்டைகளில் சென்னை மாநகராட்சி ஆணையரின் கையொப்பம் இருக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த அடையாள அட்டை சொத்து உரிமையாளர்களின்  வீட்டுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2021-22 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியை விட, 2022-23 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சென்னையில் சொத்து வரி வசூல் ரூபாய் 293 கோடி அதிகரித்துள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரி வசூல் தொடங்கியது. சென்னையில் உள்ள 13  லட்சம் சொத்து உரிமையாளர்களில் 4 லட்சம் பேர் அக்டோபர் 10 ஆம் தேதி வரை தங்கள் சொத்து வரியைச் செலுத்தியுள்ளதாக பெருநகர மாநகராட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.