சென்னை: காகிதப் பயன்பாடு தேவைப்படாத இ-அலுவலக அமைப்பு முறையை(e-Office system) நடைமுறைப்படுத்தியுள்ளது சென்னையிலுள்ள ஐசிஎஃப் நிறுவனம்.
இதன்மூலம் அன்றாட அலுவலக நடவடிக்கைகளில் செலவினங்கள் குறைவதுடன், அலுவலக செயல்பாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சத்தையும் பேணி பின்பற்ற முடியும் என ஐசிஎஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன்மூலமாக அலுவலக செயல்பாட்டில் புத்தாக்க நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். அதன்வழியாக, பயனற்ற செயல்பாடு மற்றும் நடவடிக்கைகளிலிருந்து ஊழியர்களை விடுவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியின் ஒருபகுதியாக RailTel அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐசிஎஃப் அலுவலத்தில், ஃபைல் மேனேஜ்மென்ட் சிஸ்டம்(eFile), நாலேஜ் மேனேஜ்மென்ட் சிஸ்டம்(KMS), கொலாபரேஷன் அன்ட் மெசேஜிங் சர்வீசஸ்(CAMS) மற்றும் பெர்சனல் இன்ஃபர்மேஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டம்(PIMS) போன்றவை நடைமுறைக்கு வரும்.
ஐசிஎஃப் பொது மேலாளர் ராகுல் ஜெயின், இந்த இ-அலுவலக அமைப்பை தொடங்கி வைத்தார்.