கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய அணி இதுவரை வலுவாக செயல்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து மற்றும் உகாண்டா அணிகளை எளிதாக தோற்கடித்து. காலிறுதியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் சிரமங்களை எதிர்கொண்டு வெற்றியை பதிவு செய்தனர். காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு வந்துள்ளது.
இதையடுத்து இன்று இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது ஆன்டிகுவாவில் இன்று மாலை தொடங்குகிறது. இன்றைய போட்டி இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணி சார்பில், யாஷ் துல் (கேப்டன்), ஹர்னூர் சிங், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, எஸ்கே ரஷித் (துணை கேப்டன்), நிஷாந்த் சிந்து, சித்தார்த் யாதவ், அனிஷ்வர் கவுதம், தினேஷ் பானா, ஆராத்யா யாதவ், ராஜ் அங்கத் பாவா, மனவ் பராக், கௌஷால் தாம்பே, , வாசு வாட்ஸ், விக்கி ஓஸ்ட்வால், ரவி குமார், கர்வ் சங்வான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி தொடர்ந்து நான்காவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது ஏற்கனவே, கடந்த 2016, 2018 மற்றும் 2020 அண்டர்-19 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு வந்திருந்தது. 2018 இல், இந்தியா உலகக் கோப்பையையும் வென்றது. அதே நேரத்தில் 2016 மற்றும் 2020 இல் அந்த அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.