கொல்கத்தா

லிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க முயற்சி செய்து வருவதாக சர்வதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டு உலகெங்கும் பல ரசிகர்களை பெற்றுள்ளது.   எனினும் சர்வதேச அளவில் மற்ற விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் போது அந்த போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்ப்பது இல்லை.   குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டையும் சேர்க்க வேண்டும் என்பது ரசிகர்களின் நெடுநாளைய விருப்பம் ஆகும்.

சர்வதேச கிரிக்கெட் வாரியம் 5 நாள் கூட்டம் ஒன்றை கொல்கத்தா நகரில் நடத்தியது.   இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சர்வ தேச கிரிக்கெட்  வாரியத் தலைவர் தேவ் ரிசர்ட்சன் சந்தித்தார்.  அப்போது அவர், “ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் இடம் பெறாதது வருத்தத்துக்குறியது.  வெகுநாட்களாக இத்தகைய போட்டிகளில் கிரிக்கெட் இடம் பெற வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை ஆகும்.   இதற்கான முயற்சிகளில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டு வருகிறது.

பாரிஸ் நகரில் நடைபெற உள்ள 2024 ஆம் வருட ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக் கொள்ள விண்ணப்பிக்கும் காலக் கெடு முடிந்து விட்டது.   எனவே நாம் 2028 ஆம் வருடம் நடைபெற உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர ஒலிம்பிக்கில் பங்கு பெற தேவையான முயற்சிகளை செய்வோம்.    அதில் வெற்றி பெற்று இனி ஒலிம்பிக் உள்ளிட்ட பந்தயங்களில் கிரிக்கெட்டையும் சேர்க்க வகை செய்வோம்”  எனக் கூறினார்.