தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் அல்லது ஆதரரிக்கும் நாடுகளுடன் கிரிக்கெட் உறவை துண்டிக்க வேண்டுமெனற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்( பிசிசிஐ) கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) நிராகரித்துள்ளது.

12

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றமாட்டியது. இந்திய வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்ஹானுடன் இந்திய அணி விளையாடக் கூடாது என பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக பேசிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு தான முடிவெடுக்க வேண்டும் இது இருநாட்டின் பிரச்சனை என கூறியுள்ளது. அதே சமயம் பாகிஸ்தானை எதிர்கொள்ள வில்லை எனில் உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழக்க நேரிடும் என பிசிசிஐ தெரிவித்தது.

இதனை தொடர்ந்து புல்வாமா தாக்குதலை கொண்டு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) அமைப்புக்கு, பிசிசிஐ கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. அதில், தீவிரவாதத்திற்கு ஆதராகவும், அதனை ஊக்குவிக்கும் நாடுகளுடனான கிரிக்கெட் உறவை துண்டிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மேலும், உலகக் கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போது இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது. எனினும் கடிதத்தில் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானிற்கு தடை விதிக்க வேண்டுமென பிசிசிஐ குறிப்பிடவில்லை.

இந்நிலையில் பிசிசிஐ கடிதம் எழுதியது தொடர்பாக ஐசிசி பொதுக்குழு கூட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் வேண்டுகோள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிசிசிஐ சார்பில் அமிதாப் சவுத்ரி இந்த கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, இந்தியாவின் கோரிக்கையை ஐசிசி ஏற்க மறுத்துள்ளது. அதுமட்டுமின்றி, கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு இடையில் நட்புறவை பேணுவதிலும், உறவை துண்டிப்பதிலும் தங்களுக்கு எந்தவித பங்கும் இல்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானிற்கு தடை விதிக்க முடியாது. கிரிக்கெட் விளையாடாமல் இரு நாட்டை ஒதுக்குவது என்பது அந்த நாட்டின் அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இதில் ஐசிசிக்கு எந்தவித பங்கும் கிடையாது. ஏனெனில் சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடி வருகின்றனர். அவர்கள் மீது இது போன்ற தடையை விதிக்க முடியாது. அதேசமயம், இந்திய வீரர்களுக்கு கேட்டுள்ள அதிக பாதுகாப்பு கோரிக்கை பரிசீலிக்கப்படும் என ஐசிசியின் தலைவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே வரும் ஜூன் 16-ம் தேதி ஓல்டு டிராபோர்ட் நகரில் நடைபெறும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், இந்தியாவும், பாகிஸ்தானும் மோத உள்ளன. ஆனால், இதில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என்று பலதரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.