டெல்லி: இந்த ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடக்கவிருக்கும் நிலையில், அந்த போட்டிக்கான வெற்றிக் கோப்பையை மக்களின் பார்வையிடும் வகையில் சுற்றுலாத் தலமான தாஜ்மஹாலில் வைக்கப்பட்டுள்ளது.
ஐசிசி உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது. மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா உலகக் கோப்பை போட்டியை நடத்தி உள்ளது. ஆனால் இந்தாண்டு இந்தியாவே முதன் முறையாக நடத்த உள்ளது.
இந்த போட்டிகள் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் போட்டியானது, குஜராத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டி நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
இந்த போட்டிகள் தொடர்பான ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் மோதும் ஆட்டம் அக்டோபர் 15ஆம் தேதிக்கு பதில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் ஆட்டம் அக்டோபர் 10-ம் தேதியும் அதே நாளில் பாகிஸ்தான் இலங்கையும் பல பரிட்சை நடத்துகிறது.
அக்டோபர் 12ஆம் தேதி ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதுகிறது.
அக்டோபர் 13ஆம் தேதி நியூசிலாந்து வங்கதேசமும் பலப் பரிட்சை நடத்துகின்றன.
அக்டோபர் 14ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் மோதுகிறது. அக்டோபர் 15ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப் பரிட்சை நடத்துகின்றன.
நவம்பர் 11ஆம் தேதி ஆஸ்திரேலியா வங்கதேசம் அணிகள் மோதுகிறது. இதேபோன்று அதே நாளில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி அன்று இந்தியாவும் நெதர்லாந்தும் மோத உள்ளன. இந்தியா நியூசிலாந்து மோதும் ஆட்டம் கடைசி லீக் ஆட்டம் ஆகும் .
முதல் அரை இறுதி நவம்பர் 15ஆம் தேதி மும்பையிலும், நவம்பர் 16ஆம் தேதி இரண்டாவது அரை இறுதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது. நவம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள உலகக் கோப்பை இந்தியா வந்த நிலையில் தற்போது பிசிசிஐ மற்றும் ஐசிசி இணைந்து தாஜ்மகாலில் மக்களின் பார்வைக்கு வைத்துள்ளது. இதையடுத்து இந்த கோப்பை மக்களின் பார்வைக்கு இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு எடுத்துச்சென்று வைக்கப்பட உள்ளது. இறுதியாகக் குஜராத் நரேந்திர மோடி மைதானத்துக்கு வந்து சேரும் என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.