மும்பை: தமது உறுப்பினர்கள் யாரும், அரசை விமர்சிப்பதற்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தலை வழங்கியுள்ளன ஐசிஏஐ மற்றும் ஐசிஎஸ்ஐ அமைப்புகள்.
இன்ஸ்டிட்யூட் ஆஃப் சார்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் என்ற அமைப்பு சுருக்கமாக ஐசிஏஐ என்றும், இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் என்ற அமைப்பு சுருக்கமாக ஐசிஎஸ்ஐ என்றும் அழைக்கப்படுகிறது.
கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில், ஜிஎஸ்டி மற்றும் சட்டரீதியான தணிக்கைகள் தொடர்பாக பல்வேறு ஒழுங்குமுறை தாக்கல்களுக்கான காலஅளவு நீட்டிப்பது தொடர்பானதுதான் அந்த அமைப்புகளின் உறுப்பினர்களுடைய பிரச்சினை.
இதற்காக, அவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதால், அரசுக்கு தேவையற்ற சங்கடங்கள் ஏற்படுவதாக கூறப்படவே, இந்த புதிய அறவுறுத்தலை, தங்களின் உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளன அந்த அமைப்புகள்.