
சுக்மா, சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து புலனாய்வுத் துறையினர் ஏற்கனவே ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த 13ஆம் தேதியன்று சுக்மா மாவட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 100 கிலோ எடையுள்ள கண்ணி வெடி வெடித்ததில் 9 ராணுவத்தினர் மரணம் அடைந்தனர். மாவோயிஸ்டுகள் தாக்குதலை முறியடிப்பதற்காக ராணுவத்தினர் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது இந்த குண்டு வெடித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து மார்ச் மாதம் முதல்வாரம் புலனாய்வுத்துறை ராணுவத்துக்கு தகவல் அனுப்பியது தற்போது தெரிய வந்துள்ளது. மாவோயிஸ்டுகள் பல புதிய யுக்திகளைக் கொண்டு இந்தப் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்த தகவல் தெரிவித்துள்ளது. அதை யொட்டி ராணுவம் எல்லைக் காவலை பலப்படுத்தி உள்ளது. ஆனால் சாலை கண்ணிவெடி தாக்குதலை கவனிக்காமல் விட்டுவிட்டது.
அதே போல் மாவோயிஸ்டுகள் தங்களின் தாக்குதல்களை ஏப்ரல் முதல் ஜூலை வரை மட்டுமே ஒவ்வொரு வருடமும் நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. வனப் பகுதிகளில் குளிர்காலத்தை விட கோடைக் காலத்தில் வெளிச்சம் அதிகமாக உள்ளதே இதற்குக் காரணம் என சொல்லப் படுகிறது. ஆனால் உளவுத் துறையின் எச்சரிக்கைப் படி மாவோயிஸ்ட் தலைவர்கள் இனி ஜனவரி முதல் ஜூன் வரை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல் இந்த தாக்குதல் மார்ச் மாதம் நடைபெற்றுள்ளது.