போபால்: ‘சமய நம்பிக்கையின் வழி குணப்படுத்துதல்’ நடவடிக்கையில் ஈடுபட்ட புகாரில், தேர்தல் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர்.
மத்தியப் பிரதேச மாநில சிதி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் உமாசங்கர்.
ஆனால், தலைவலி சிகிச்சை எடுப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற அவர், தனக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு, பிற நோயாளிகளுக்கு ‘சமய நம்பிக்கையின் வழி குணப்படுத்தல்’ செயல்பாட்டை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில் இவர் மீது எழுந்த புகாரையடுத்து, இவர் தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பாக, இவரிடம் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை என்றும், வெறும் குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த 1990ம் ஆண்டு ஐஏஎஸ் தேறிய உமாசங்கர், 2008ம் ஆண்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர். இவர், நேர்மையான அதிகாரி என்று அறியப்படுபவர்.
– மதுரை மாயாண்டி