சென்னை:
மிழகத்தில் எட்டு மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை கலெக்டரும் மாற்றப்பட்டு புது கலெக்டர் நியமிக்கப்பட்டு உள்ளார்
சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த கோவிந்தராஜ் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் இணைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.
இது குறித்து, தமிழக தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சென்னை கலெக்டர் மகேஸ்வரி
சென்னை கலெக்டர் மகேஸ்வரி

“மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவு இயக்குநர் டி.பி.ராஜேஷ், கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுகிறார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் ஏ.ஞானசேகரன் அங்கிருந்து மாற்றப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டுகிறார்.
நிதித்துறை துணைச் செயலாளர் பிரஷாந்த் எம்.வத்நேர், திருவண்ணாமலை ஆட்சியராக இடமாற்றம் செய்யப்படுகிறார்.
அந்த பதவியில் இருந்த எஸ்.பழனி வருவாய் துறையில் கூடுதல் பொறுப்பு  அளிக்கப்பட்டுள்ளது.
உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் இணைச் செயலாளர் பி.மகேஸ்வரி, சென்னை மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்படுகிறார்.
தொழிலாளர்கள் ஆணையர் எல்.சுப்பிரமணியன், விழுப்புரம் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்படுகிறார். அந்த பொறுப்பில் இருந்து திருமதி லட்சுமி விடுவிக்கப்பட்டார்.
லால்குடி ஆட்சியர் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய இணை மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.
கும்பகோணம் துணை ஆட்சியர் மந்திரி கோவிந்த ராவ், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (கல்வி) நியமிக்கப்படுகிறார்.
தூத்துக்குடி துணை ஆட்சியர் எஸ்.கோபால சுந்தரராவ், சென்னை மாநகராட்சி மண்டல துணை கமிஷனராக (தெற்கு) நியமிக்கப்படுகிறார்” என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் வருவதை தொடர்ந்து  மேலும் சில அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.