மும்பை: இந்திய விமானப் படையின் போக்குவரத்து விமானமொன்று, மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது, ஓடுபாதையிலிருந்து தடம்மாறி சிறியளவிலான விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் யாரும் காயமடைந்ததாக தகவல்கள் இல்லை. இந்திய விமானப் படையின் ஏஎன்-32 போக்குவரத்து விமானம், மும்பை விமான நிலையத்தின் 27வது ஓடுபாதையில் செல்கையில்தான் இந்த விபத்து நிகழ்ந்தது.

பெங்களூர் அருகேயுள்ள யேலஹன்கா விமானப் படை தளத்திற்கு புறப்பட்டபோதுதான் இந்த விபத்து நேர்ந்தது. இந்த விபத்தினால், விமான இயக்க செயல்பாடுகள் 20 நிமிடங்கள் பாதிக்கப்பட்டன.

விமான நிலையத்தின் 27வது ஓடுபாதையில் விபத்து நேர்ந்ததால், அதற்கு பதிலாக 32வது ஓடுபாதை பயன்படுத்தப்பட்டது.