இந்திய விமாப்படை விமானி அபிநந்தனை கௌவரவிக்கும் வகையில், அவரின் வீரத்தை பற்றிய பாடம் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெறும் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியாவிற்கு ஊடுவிய பாகிஸ்தானின் எஃப்-16 ரக விமானத்தை துரத்திக் கொண்டு இந்தியாவின் மிக்-21 ரக போர் விமானம் சென்றது. அந்த விமானத்தில் சென்ற விமானி அபிநந்தன் எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய உடன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார். அதனை தொடர்ந்து, விமானி அபிநந்தனை மீட்க இந்தியா நடவடிக்கையை மேற்கொண்டது. உலக நாடுகளின் அழுத்தத்தினால் அபிநந்தனை விடுவிப்பதாக அந்நாட்டு அதிபர் இம்ரான் கான் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர், இந்தியா சார்பில் அபிநந்தனுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் தைரியமாக வீரநடைப் போட்டு நடந்து வந்த அபிநந்தனை அனைவரும் பாராட்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது அபிநந்தன் மீசை இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. அபிநந்தனின் கார்டூன், அவரின் புகைப்படம் என சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டுகிறது. இந்தியாவிற்காக போரிட்டு எதிர்களிடம் சிறைப்பட்டு, மீண்டுவந்த அபிநந்தனை அனைவரும் நிஜ உலகின் ஹீரோவாக பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய விமானப்படை வீரர் அபிந்தன் வீரத்தை கௌரவிக்கும் விதமாக அவரைப் பற்றி பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெறும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், எந்த வகுப்பு பாடப்புத்தகத்தில் அபிநந்தன் பற்றி வரும் என குறிப்பிடவில்லை.