ஸ்ரீநகர்:

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், 4 வார ஓய்வுக்கு பிறகு மீண்டும் பணியில் சேர தனது படைப்பிரிவுக்கு திரும்பி இருப்பதாக விமான படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் 14ந்தேதி நடைபெற்ற புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் தாக்குதல் நடத்திய  இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தானின்  எஃப்-16 விமானத்திய நிலையில், தனது மிக்-ரக விமானமும் பாதிக்கப்பட்டதால், பாகிஸ்தானில் தரை யிறங்கிய நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினால் பிடிக்கப்பட்டு, இந்தியா மற்றும் உலக நாடுகளின் எச்சரிக்கையை தொடர்ந்த விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து அபிநந்தனுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, அவருக்கு  மருத்துவ ஆலோசனைகளின் படி 4 வாரங்கள் நோய் விடுப்பு கொடுக்கப் பட்டது.

அதைத்தொடர்ந்து சில நாட்கள் தனது குடும்பத்தினருடன் விடுப்பை செலவழித்த அபிநந்தன், தன் சக வீரர்கள் பணியாற்றும் படைக்கே மீண்டும் செல்ல அபிநந்தன் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

“தற்போது,  தான் சார்ந்த படை வீரர்களுடன் ஸ்ரீநகரில் இருக்க அபிநந்தன் முடிவு செய்துள்ளதாக வும், அவருக்கு மீண்டும் உடல்தகுதி குறித்த பரிசோதனை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.  அந்த பரிசோதனையில், அவரது உடல்தகுதி மீண்டும் விமானத்தில் பறக்க ஏதுவாக உள்ளதா என்று தெரிவிக்கப்படும்”  அதையடுத்தே படைப்பிரிவில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ளப்படுவது அறிவிக்கப்பட்டும் என்று ஐஏஎப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.