8 தோட்டாக்கள்” படத்தில் வெற்றியின் இயல்பான நடிப்பின் சிறப்பம்சமாக மிகவும் கவனிக்கப்பட்டது. தற்போது “ஜீவி” படத்தில் வெற்றியின் மாறுபட்ட நடிப்பு அதன் காட்சி விளம்பரங்கள் மூலம் பெரிதும் உணரப்பட்டுள்ளது.
இந்த படத்தின் முக்கியமான விஷயம் நாம் ஒருபோதும் பார்த்திராத அல்லது கேள்விப்படாத கான்செப்டை கொண்டிருந்தது. என்னை பொருத்தவரை, “ஜீவி” ஒரு ‘பேண்டஸி-த்ரில்லர்’ என்று கூறுவேன் என கூறியுள்ளார் வெற்றி .
அடுத்து என்னை கவர்ந்த விஷயம் எனது கதாபாத்திரம், இது “8 தோட்டாக்கள்” படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. உண்மையில், நான் பல்வேறு கதைகளை கேட்டேன், ஆனால் அவை எல்லாமே ஒரே மாதிரியாக, என் அறிமுக படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் போலவே இருந்தது. ஆனால் இது மிகவும் வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது” என்றார்.
வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளபாண்டியன், வி சுடலைக்கண் வெள்ளபாண்டியன், சுப்ரமணியம் வெள்ளபாண்டியன் தயாரித்திருக்கும் இந்த படத்தை விஜே கோபிநாத் இயக்கியிருக்கிறார். பாபு தமிழ் கதை எழுதியிருக்கிறார். வெற்றி, மோனிகா சின்னகோட்ளா, அஷ்வின் சந்திரசேகர், ரோகிணி, கருணாகரன், ரமா, மைம் கோபி, தங்கதுரை மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு ஐரா புகழ் சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைத்திருக்கிறார். பிரவீன் குமார் ஒளிப்பவு செய்ய, பிரவீன் கேஎல் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.