டில்லி
தாம் ஒருபோதும் மோடியின் குடும்பத்தினரை பற்றி தவறாக பேசப் போவதில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பாஜக தனிமனித தாக்குதலை அதிகம்செய்து வருகிறது. இது எதிர்க்கட்சியினருக்கு மட்டுமின்றி பொது மக்கள் மனதிலும் கடும் அதைருப்தியை உண்டாக்கி இருக்கிறது. பிரதமர் மோடி தொடர்ந்து நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரை பற்றி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
சமீபத்தில் மறைந்த முன்னாள் பிரதம்ர் ராஜிவ் காந்தியை அவர் இறக்கும் போது ஒன்றாம் நம்பர் ஊழல் பேர்வழியாக இறந்தார் என மோடி தெரிவித்தது கடும் சர்ச்சையை உண்டாக்கியது. பாஜகவின் கர்நாடக மாநில மக்களவை வேட்பாளர் உட்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் ராஜிவ் காந்தியின் மகனும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி அதை பெருந்தன்மையாக விட்டு விட்டார்.
இது குறித்து ராகுல் காந்தி, “நன் எப்போதும் மோடியின் தாய் தந்தையர் மற்றும் குடும்பத்தினரை தவறாக பேச மாட்டேன். ஆனால் அவர் எனடு தந்தை, பாட்டி, கொள்ளுத் தாத்தா என பலரையும் அவமானப்படுத்தி உள்ளார். நான் எனது வாழ்நாளில் அவர் குடும்பம் மற்றும் பெற்றோரை பற்றி ஒரு வார்த்தையும் தவறாக பேச மாட்டேன். நன் இறந்தாலும் அவர் தாய் தந்தையை அவமதிக்க மாட்டேன்” என கூறி உள்ளார்.