டில்லி

ளைஞர்களை பெருமளவில் சேர்த்து உத்திரப் பிரதேச மாநிலத்தை மேம்படுத்த உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளர்.

கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரியங்கா காந்தி அரசியலுக்கு வர வேண்டும் என்னும் கோரிக்கை காங்கிரஸ் தொண்டர்களால் முன் வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக உத்திரப் பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி அரசியலுக்கு வர கோரிக்கை விடுத்து அடிக்கடி சுவரொட்டிகள் ஒட்டப்படுவது வழக்கமாகும்.

இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக பிரியங்கா காந்தியை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நியமித்துளார். அத்துடன் உத்திரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதியின் பொறுப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி வைத்துள்ள நிலையில் இந்த நியமனம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

இது குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “இந்தியாவை உருவாக்க ஒரு புதிய மையமாக உத்திரப் பிரதேச மாநிலம் அமையும். பிரியங்கா மற்றும் ஜோதிராதித்யா தலைமையிலான உத்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் அணி மாநில அரசியலில் ஒரு புதிய உதயத்தை உருவாக்கும். அத்துடன் உத்திரப் பிரதேச மாநிலத்தை மேம்படுத்த பெருமளவில் இளைஞர்களை சேர்க்க உள்ளேன்” என பதிந்துள்ளார்.