சென்னை: இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் பெரியாரின் படத்தை திறந்து வைக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக எம்.பி. குடும்ப திருமண விழாவில் பேசும்போது தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கில் 10 நாள் பயணமாக  இங்கிலாந்து, ஜெர்மனி செல்கிறார்.  இந்த நிலையில், தி.மு.க எம்.பி என்.ஆர் இளங்கோ இல்ல திருமண விழாவில்  கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  , தமிழ் சமூகங்ததை தலைநிமிர செய்தத தந்தை பெரியாரின் திருவுருவ படத்தை இங்கிலாந்தின்  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் என் கையால் திறந்து வைக்க போகிறேன்… அதை நினைத்து இப்போதே மகிழ்ச்சி கடலில் திளைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் 10 நாட்கள் வெளிநாடு பயணம் – ஜெர்மனி, லண்டன் பயண விவரங்கள் வெளியீடு…