அர்ஜென்டினா – குரோஷியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருக்கும் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தைக் காண குரோஷிய அழகி இவானா நோல் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
2016ம் ஆண்டு மிஸ் குரோஷியா பட்டம் வென்ற 30 வயதான இவானா நோல் கத்தார் கால்பந்து மைதானத்தில் தொடை தெரிய ஸ்வெட் ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு காற்று வாங்கும் உடையில் கவர்ச்சியாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
இஸ்லாமிய நாடான கத்தாரில் ஆண் பெண் என அனைவரும் தோள் தெரிய ஸ்லீவ் லெஸ் போடவோ முட்டி தெரிய ஷார்ட்ஸ் அணியவோ கூடாது.
உலகக்கோப்பை போட்டிகளைக் காண வரும் வெளிநாட்டு பயணிகளுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும்.
இதையும் மீறி முன்னாள் அழகு ராணி இவானா நோல் கவர்ச்சி உடையில் தோன்றி தனது அணியான குரோஷியாவை மட்டுமன்றி கால்பந்து ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி வருகிறார்.
https://www.instagram.com/p/CmB9jL6rVQ6/
இவரைக் காண கத்தார் நாட்டு ஆண்கள் ஈயாக மைதானத்திற்கு படையெடுப்பதுடன் இவருடன் செல்பி எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஸ்டேடியத்தில் கால்பந்தை காண வரும் ரசிகர்களின் உற்சாகம் கரைபுரள்வதை அடுத்து அதனை கட்டுப்படுத்த பாதுகாப்பு வீரர்களும் திணறி வருகின்றனர்.
பிரேசில் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் ரசிகர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் அனைவரும் இவானா-வையே சுற்றிச்சுற்றி வந்ததை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் இவரை மைதானத்தை விட்டு வெளியேறும்படி கூறினர்.
இந்த போட்டித் தொடர் துவங்குவதற்கு முன் 4.5 லட்சமாக இருந்த இவரது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் இப்போது 2.4 மில்லியனாக உயர்ந்திருக்கிறது.
அரையிறுதியில் அர்ஜென்டினா-வை வென்றாலும் தோற்றாலும் இன்னும் இரண்டு போட்டிகளில் குரோஷியா அணி விளையாட உள்ளதால் இந்த இரண்டு போட்டிகளின் போதும் மைதானத்திற்குள் இவர் அனுமதிக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
அதேவேளையில், இந்த உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் குரோஷியா அணி வெற்றிபெற்றால் நிர்வாணமாக ஓட இருப்பதாக இவானா நோல் கூறியதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதற்கு இவானா நோல் மறுப்பு தெரிவித்துள்ள போதிலும் இந்த தகவல் கத்தார் பாதுகாப்பு அதிகாரிகளை மேலும் திணற வைத்திருக்கிறது.