டில்லி:
ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு தப்பி ஓடமாட்டே என்று உத்தரவாதம் அளித்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், புதிய விளக்க மனுவை இன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் ஒரு எம்.பி., என்றும் நாட்டின் பொறுப்புமிக்க குடிமகனாகிய நான், ஜாமீன் கிடைத்தால் எங்கும் செல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ளதுடன், ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு தப்பி விடுவேன் என சிபிஐ சொல்வது முற்றிலும் தவறு என்றும், எனது குடும்பம் பல ஆண்டுகளாக, பாரம்பரியமாக வசித்து வருகிறது. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த விசாரணையின்போது சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.