திருப்பபத்தூர்: மறைந்த நடிகர் விவேக்கின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றி வைப்பேன் என  திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார் தெரிவித்துள்ளார். அத்துடன் விவேக் பேசும் வீடியோவையும் இணைத்துள்ளார்.

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,இன்று அதிகாலை உயிரிழந்தார்.அவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்படஉள்ளது.

விவேக் பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்ததுடன், மக்களிடையே மூடப்பழக்கக வழக்கம் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து, தனது திரைப்படங்களின் வசனங்கள் மூலம் விழிப்புணர்வுகளையும்  உருவாக்கி வந்தார். அப்துல் கலாமுடன் சேர்ந்து மரம் நடுதலை ஊக்குவித்து வந்தார். பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்து மாணவ, மாணவிகளை ஊக்குவித்து வந்த விவேக், தான் நட்டு வைத்த கன்றுகள் வளர்ந்து மரமானதை புகைப்படம் எடுத்து டிவிட்டரில் வெளியிட்டு சிறு பிள்ளை போன்று சந்தோஷப்பட்டவர் விவேக்.  யாராவது மரக்கன்றுகளை நட்டால் அதை மனதார பாராட்டி வந்தார்.

இந்த நிலையில்,  திருப்பத்தூரில் மாணாக்கர்களுடன் சேர்ந்து மரம் நடும்விழா நடத்திய விவேக் குறித்து திருப்பத்தூர் எஸ்.பி.விஜயகுமார் ஐபிஎஸ் விவேக் பேசிய டிவிட்டரில் வெளியிட்டுள்ளளார்.  அத்துடன் விவேக்கின் நிறைவேறாத வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவானது விவேக் திருப்பத்தூரில் இருக்கும் கல்லூரி ஒன்றின் மாணவ, மாணவியருக்கு வாக்குறுதி அளித்தது.  அநத வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவரும் விவேக்கின் நற்செயல் குறித்து கண்கலங்குகின்றனர்.

அந்த வீடியோவில், திருப்பத்தூரில் இருக்கும் சேக்ரட் ஹார்ட் கல்லூரி மாணவ, மாணவியருடன் சேர்ந்து திங்கட்கிழமை 5 ஆயிரம் மரக்கன்றுகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன். இன்று மதியத்திற்கு மேல் திருப்பத்தூருக்கு வருவதாக இருந்தேன். ஆனால் சுகாதாரத்துறை அமைச்சரின் அறிவுரைப்படி, கோவிட்டின் இரண்டாம் அலை வந்து கொண்டிருப்பதால் நிறைய மாணவர்கள் ஒரு இடத்தில் கூடுவது வேண்டாம். மாணவர்கள் யாருக்காவது நோய் தொற்று ஏற்படுமோ என்று அச்சப்படுகிறார்கள் என்றார்.

தேர்தல் முடிந்த பிறகு, இந்த அலை ஓய்ந்த பிறகு ஒரு நல்ல நாளில் பெரிய அளவில் மாணவர்களுடன் சேர்ந்து இந்த மரம் நடு நிகழ்வை செய்யலாம். திருப்பத்தூரே விழாக்கோலம் பூணும் அளவுக்கு சிறப்பாக பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கிறேன். அதற்கு நீங்களும் என்னுடன் வரணும்னு ஆசைப்படுகிறேன். ஏன் என்றால் ஒரு மாணவருக்கு கூட இந்த நிகழ்ச்சி மூலமாக நோய் தொற்று வந்துவிடக் கூடாது என்கிற கரிசனம். அந்த எண்ணம் தான் காரணம். விரைவில் சந்திப்போம் என்று விவேக் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.