தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைப்பெறுகிறது.

அதிமுக – பாஜக, திமுக – காங்கிரஸ், அமமுக – தேமுதிக, மநீம – சமக, ஆகியக் கட்சிகள் தங்கள் கூட்டணியுடனும் நாதக தனித்தும் இத்தேர்தலில் களம் காணுகின்றன. 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 6 கோடியே 2,67,446 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் 2021-ல் வாக்களித்த நடிகர் ஜெயம் ரவி செய்தியாளர்களிடம், “இந்த வருஷம் நல்ல ஒரு ஆட்சி வரணும்ன்னு உங்கள மாதிரியே நானும் ஆசைப்படுறேன். அதுக்காக தான் என்னோட உரிமையோட ஓட்டு போட்டுருக்கேன். இங்க எல்லாம் பாதுகாப்பா இருக்கு, அதனால மாஸ்க் போட்டுட்டு வந்து நீங்களும் ஓட்டு போடுங்க. இது நம்மளோட கடமை” என்றார்.