தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைப்பெறுகிறது.

அதிமுக – பாஜக, திமுக – காங்கிரஸ், அமமுக – தேமுதிக, மநீம – சமக, ஆகியக் கட்சிகள் தங்கள் கூட்டணியுடனும் நாதக தனித்தும் இத்தேர்தலில் களம் காணுகின்றன. 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 6 கோடியே 2,67,446 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பிரபல இயக்குநர் அமீர் வீடியோ பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “அன்பார்ந்த தமிழர்களே, மாநில சுயாட்சியை மீட்டெடுக்க, தமிழகத்தின் மாண்பையும், பெருமையையும் காத்திட நான் இன்றைக்கு வாக்களித்து விட்டேன். மறக்காமல் நீங்களும் வாக்களிக்க வேண்டுகிறேன். நன்றி” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.