சென்னை: தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டும், எங்கள் தலைவர் கலைஞர் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து சிறப்பித்த குடியரசுத்தலைவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், வழியனுப்பு விழாவில், அவருடைய புத்தகங்கள் மூலம் அவரது ஞானத்தையும் தன்னுடன் பகிர்ந்து கொண்டார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சட்டமன்ற பேரவையின் நூற்றாண்டு விழாவையும், கருணாநிதி உருவப்படத்தையும் திறந்து வைத்தார்.

இதையடுத்து இரவு கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்த குடியரசுத்தலைவர்  இன்று (ஆகஸ்ட் 3) காலை சென்னையிலிருந்து கோயம்புத்தூர் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையித்தில் அவருக்கு வழியனுப்பும் விழா நடைபெற்றது.  அவரை வழியனுப்ப சென்னை விமான நிலையத்திற்குச் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ராம்நாத் கோவிந்த்,  தான் எழுதிய மூன்று புத்தகங்களை மு.க. ஸ்டாலினுக்குப் பரிசாகக் கொடுத்தார்.

அதாவது, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கியது, ’தி ரிபப்ளிக் எத்திக்ஸ்’ எனத் தலைப்பிடப்பட்ட இந்தப் புத்தகங்கள். இது, ராம்நாத் கோவிந்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் தொகுப்புகள் அடங்கியது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டும், சட்டப்பேரவையில் எங்கள் தலைவர் கலைஞர் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்த எங்கள் மாண்புமிகு ராஷ்டிரபதி ராம்நாத் கோவிந்துக்கு நன்றி.  அவருடைய புத்தகங்கள் மூலம் அவரது ஞானத்தையும் பகிர்ந்து கொண்டார் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு வந்த குடியரசுத்தலைவருக்கு விமான நிலையத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் புத்தகத் தொகுப்பை கொடுத்து வரவேற்றார். அதில்,

வாடிவாசல்  – ஆசிரியர்: சி.சு. செல்லப்பா, செம்பருத்தி ஆங்கில பதிப்பு – ஆசிரியர்:  தி. ஜானகிராமன். திருக்குறளின் ஆங்கிலப் பதிப்பு/ ‘தலைமுறைகள்’ ஆங்கில பதிப்பு ஆசிரியர்:  நீல. பத்மநாபன். ‘பண்டைய எழுத்து முறை’ (ஆங்கிலம்) ஆசிரியர்: கே. ராஜன். ‘கரிசல் கதைகள்’ ஆங்கில பதிப்பு ஆசிரியர்: கி. ராஜநாராயணன். ‘சுழலில் மிதக்கும் தீபங்கள்’ ஆங்கில பதிப்  – ஆசிரியர்:  ராஜம் கிருஷ்ணன் ஆகிய புத்தங்கள் இடம்பெற்றிருந்தன.

இதற்கு பிரதியுபகாரமாக குடியரசுத்தலைவர் முதல்வருக்கு புத்தகம் வழங்கி உள்ளார்.