இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் தமிழகம்உள்பட 10 மாநில முதல்வர் களுடன் பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா பாதிப்பு குறித்தும், கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளார்.
அதன்படி, கொரோனா தடுப்புப் பணிக்காக மேலும் ரூ.3000 கோடி உடனடியாக தேவை என்று கூறியவர், ஏற்கனவே தமிழகத்திற்கு ஒதுக்கிய 712.64 கோடி ரூபாயில் 2 கட்டமாக ரூ.512.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 3ஆயிரம் கோடி ரூபாயை உடனே ஒதுக்க வேண்டும்.
ஜிஎஸ்டி வருவாய் குறைந்த காரணத்தினால் மத்திய அரசு தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.9000 கோடி ஒதுக்க வேண்டும்
தமிழகத்தில் பிசிஆர் டெஸ்டுக்கான செலவின் 50 சதவீதத்தை பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து மத்திய அரசு வழங்க வேண்டும்,
தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.1000 கோடியை உடனடியாக வழங்கவும் பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்
உயர்தர வெண்டிலேட்டர்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்திற்கு ரிசர்வ் வங்கியின் சிறப்பு திட்டத்தின் SIDBI ரூ.1000 கோடியை வழங்க உதவ வேண்டும்
நவம்பர் வரை ரேஷனில் வழங்க 55,637 மெட்ரிக் டன் துவரம் பருப்பு வழங்க வேண்டும்
கொரோனா பரிசோதனைக்காக நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் தமிழக அரசு செலவிடுவதாக தெரிவித்தவர், தமிழகத்திற்கான நிதியை உடனே ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.