டெல்லி: உத்தரபிரதேச சட்மன்ற முதல்கட்ட தேர்தலையொட்டி, பிரதமர் மோடி பதிவிட்டுள்ள டிவிட்டில், “இது ஜனநாயகத்தின் புனித திருவிழா; கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து வாக்களியுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் உள்ள 403 சட்டசபை தொகுதிக்கு 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி,முதற்கட்ட தேர்தல் இன்று (பிப்ரவரி 10 ஆம் தேதி) தொடங்கி உள்ளது. இன்றைய தேர்தல், இன்று ஷாமிலி, ஹாபூர், கவுதம் புத் நகர், முஸாபர்நகர், மீரட், பாக்பாட், காசியாபாத், புலன்ட்சார், அலிகர், மதுரா, ஆக்ரா ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது.
கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து, ஜனநாயகத்தின் புனித திருவிழாவில் உபி வாக்காளர்கள் அனைவரும் முதலில் வாக்களியுங்கள் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ள டிவிட்டில், உத்தரபிரதேச சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. கோவிட் விதிகளைப் பின்பற்றி இந்த ஜனநாயகத்தின் புனிதமான திருவிழாவில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நினைவில் கொள்ளுங்கள் – முதலில் வாக்களியுங்கள், பிறகு சிற்றுண்டி! என்று தெரிவித்துள்ளார்.