
நேப்பிள்ஸ்: லயனல் மெஸ்ஸியை தான் எப்போதுமே எதிராளியாக பார்த்ததில்லை என்றும், அவர் என்றுமே தனது நண்பர் என்றும் கூறியுள்ளார் போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
தற்போது, இத்தாலியின் கிளப் அணியான ஜுவைன்டஸ் அணிக்கா ஆடி வருகிறார் ரொனால்டோ. மெஸ்ஸி, பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடி வருகிறார். சமீபத்தில் போட்டியில், பார்சிலோனா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது ஜுவைன்டஸ் அணி.
இந்நிலையில் ரொனால்டோ கூறியிருப்பதாவது, “மெஸ்ஸியுடன் எனக்கு எப்போதுமே நல்லுறவு உண்டு. நான் ஏற்கனவே கூறியதைப்போல், கடந்த 12, 13, 14 ஆண்டுகளாக, மெஸ்ஸியுடன் நான் பல பரிசுகளைப் பகிர்ந்துகொண்டு வருகிறேன்.
அவரை எப்போதுமே எனது எதிராளியாக கருதியதில்லை. அவர், தனது அணிக்காக எப்போதும் சிறந்ததை செய்ய முயல்கிறார் மற்றும் அதைப்போன்றே நானும் எனது அணிக்காக சிறந்ததை செய்ய முயல்கிறேன். எங்கள் உறவு குறித்து அவரிடம் போய் நீங்கள் கேட்டாலும், அவர் இதையேதான் சொல்வார் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.
கால்பந்து விளையாட்டில், சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக, ரசிகர்கள், எதிராளி மனோபாவத்தை விரும்புகிறார்கள்” என்றுள்ளார் ரொனால்டோ.
[youtube-feed feed=1]