கொழும்பு:
ம்புக்கெனா கலவரம் தொடர்பான தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல் தவறு செய்து விட்டேன் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், ரம்புக்கெனா கலவரம் தொடர்பான தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த போதும், நான் அதில் கலந்து கொள்ளமால் தவறு செய்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி இந்திய ரிசர்வ் வங்கியிடம் ரூபாய் மதிப்பில் 3000 கோடி பெறுவதற்கான ஒப்பந்தம் இந்தாண்டு ஜனவரியில் காலாவதியானது. இந்நிலையில் இக்கடனை திரும்பத் தருவதற்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இலங்கை அரசு கடந்த வாரம் அன்னிய கடன்களை திரும்பத் தருவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதையடுத்து முதன் முதலாக இலங்கைக்கு கடன் தவணையை நீட்டித்து இந்தியா சலுகை வழங்கியுள்ளது.