ராமேஸ்வரம்,

ப்துல் கலாம் மணி மண்டபம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய பாஜக துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் வெங்கய்யா நாயுடு தமிழ் தெரியும் ஆனால் பேச மாட்டேன் என்று தெரிவித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி காலமானார்.

அவரது நினைவைப் போற்றும் விதமாக ராமேஸ்வரம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான பேய்க்கரும்பு என்னும் இடத்தில் 15 கோடி ரூபாய் செலவில் மணி மண்டபம் உருவாக்கப்பட்டு உள்ளது.

கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று,  இம் மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பாஜகவின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் வெங்கய்யா நாயுடு பேசினார். தனது உரையின் முடிவில், “பழம்பெருமை மிக்க தமிழ் மொழியில் உரையாற்ற முடியாததற்கு வருந்துகிறேன்” என்றார்.

ஆனால்,  தனது பேச்சின் உரையில் கடைசி வரியாக “தமிழ் தெரியும். ஆனால் பேச முடியாது.” என்று தெரிவித்தார்.

“தமிழ்நாட்டில் ஏன் தமிழில் பேச முடியாது? தமிழ் தெரிந்தும் தமிழில் பேச முடியாது என்கிறாரே” என்று கூட்டத்தில் பலர் முணுமுணுத்தனர்.

[youtube-feed feed=1]