
ஊழல் வழக்கு சிபிஐ விசாரணையின் போது மர்மமான முறையில் இறந்தார் சாதிக்பாட்சா. இவர் முன்னாள் தகவல்தொடர்பு துறை அமைச்சரும், 2ஜி வழக்கில் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவருமான ஆ.ராசாவின் நண்பர்.
சாதிக்பாட்சாவின் மரணம் தற்கொலை என்று சொல்லப்பட்டாலும், பல்வேறு சந்தேகங்களை பலரும் எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் திருச்சி பத்திரிக்கையாளர்களிடம் அரியலூரை சேர்ந்த பிரபாகரன் என்ற வாலிபர், “காவல்துறை அதிகாரி ஜாபர்சேட், சாதிக்பாட்சாவின் கழுத்தை நெரிக்க, நான் கால்களை பிடிக்க ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமார் வயிற்றின் மேல் உட்கார்ந்து கொள்ள சாதிக்பாட்சா கொலை செய்யப்பட்டார். தி. நகரில் உள்ள அவரது அலுவலகத்தில்தான் கொலை நடந்நது” என்று கூறியிருக்கிறார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Patrikai.com official YouTube Channel