டெல்லி: அரசியலில் இருந்து விலகுவதாக பிரபல கிரிக்கெட்வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் காம்பீர் திடீரென அறிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் காப்பீர் சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் அரசியலில் இணைந்த அவர்கடந்த மக்களவை தேர்தலின்போது, டில்லி கிழக்கு தொகுதியில் போட்டி வெற்றிபெற்று பாஜக எம்.பி.யாக இருந்து வருகிறார்,. 6.95 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கவுதம் காப்பீர் தீவிர அரசியலில் இறங்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது தற்போது திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தீவிர அரசியலில் இருந்து விலகி கிரிக்கெட் தொடர்பான பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளதால், தன்னை அரசியல் பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும பா.ஜ., தலைவர் நட்டாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ‛ எக்ஸ் ‘ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அரசியல் தொடர்பான பணிகளில் இருந்து விடுவிக்கும்படி பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இதன் மூலம் கிரிக்கெட் தொடர்பான பணிகளில் என்னால் கவனம் செலுத்த முடியும்.
மக்களுக்கு சேவையாற்ற எனக்கு வாய்ப்பு அளித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய்ஹிந்த். என கூறியுள்ளார்.