மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இந்தியா முழுவதும் பரிச்சயம் ஆனவர், மதுபாலா.
திருமணத்துக்கு பின்னர் அரிதாரம் பூசுவதை நிறுத்திக்கொண்ட அவர், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ’தலைவி’ படம் மூலம் சினிமாவுக்கு ‘’ரீ-எண்ட்ரி’ கொடுத்துள்ளார்.
ஆச்சர்யம் என்ன வென்றால், ரோஜா படத்தில் மதுபாலாவுக்கு ஜோடியாக நடித்த அரவிந்த்சாமி தான், தலைவியிலும் மதுபாலாவுக்கு ஜோடி.
ஆம்.
தலைவியில் எம்.ஜி. ஆர். வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்க,அவர் மனைவி ஜானகி அம்மாள் வேடத்தில் மதுபாலா நடிக்கிறார்.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள மதுபாலாவின் ஆதங்கம் இது:
‘ நான், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் ஆகியோருடன் நடித்துள்ளேன். இந்தியில் அக்ஷய்குமார், அஜய்தேவ்கான்,,கோவிந்தா, மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்டோருடன் நடித்து விட்டேன்.
ஆனால் என்னை பார்ப்பவர்கள் எல்லாம், ‘’ரோஜா’’ நாயகி என்று தான் சொல்கிறார்கள்.
எனது மற்ற படங்களை அவர்கள் மறந்து போய் விட்டார்களே என அப்போதெல்லாம் எனக்கு எரிச்சல் ஏற்படும்’’ என மனம் திறந்து சொன்னார், ரோஜா நாயகி.
-பா.பாரதி.