வேலூர்:

ந்தியாவில் தங்கி உள்ள இலங்கை தமிழ் அகதிகள் இலங்கைக்கு திரும்புவதை நான் விரும்புகிறேன், அவர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று  இலங்கையின் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர்  விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்யணம் மேற்கொண்டுள்ள இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறது. ஓரிரு நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசி, இலங்கை வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் வேலூரில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது,  தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களை இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் சேர்க்காததன் மூலம் அவர்களை இலங்கைக்கு திரும்ப அழைத்துகொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,  இந்தியா உள்பட மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசியவர், இந்தியா உள்பட மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பில் தன்னிறைவு அடையும் வரை இந்தியாவுக்கு அவர்கள் வந்து செல்லும் வகையில், அவர்களுக்கு இந்திய அரசு இரட்டை குடியுரிமை வழங்கிடவும் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து கூறியவர், இலங்கையில் நடைபெற்ற பேரின்போது, சமார் 10 லட்சம் தமிழர்கள் இலங்கையில் இருந்து  வெளியேறி விட்டனர். அவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் இலங்கையில் தமிழர்களின் வாழும் சூழ்நிலை  பலமாக அமையும். எற்கனவே, இலங்கையில் இருந்து வெளியேறிய தமிழர்களின் 65 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாக உள்ளன. அந்த இடங்களில் ராணுவ முகாம்கள்தான் உள்ளன. தமிழர்களின்  நிலங்களை தமிழர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்,

இலங்கையில் தமிழர்களுக்கான வாழ்வாதாரம், பாதுகாப்பை உறுதி செய்து விட்டால், நிச்சயம் அகதிகளாக உள்ள பெரும்பாலான ஈழத்தமிழர்கள் தாயகம் திரும்புவர்  தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் பட்சத்தில், எஞ்சி இருக்கும் தமிழர்களின் சொத்துகள் மற்றும் நிலங்களையாவது சிங்களவர் வசம் செல்லாமல் தடுத்து நிறுத்த முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்தியாவில் சுமார் ஒரு லட்சம் ஈழத் தமிழர்கள் உள்ளனர். இவர்களாவது தற்போது தாயகம் திரும்பினால், எங்களுக்கு குறைந்து கொண்டே வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ள முடியும் என்றும் கூறினார்.

மேலும்,  புதிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு பெரும்பான்மை தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதால், அவர் சிங்களர்களுக்கு ஆதரவாளராக மாறும் வாய்ப்பு உள்ளது… ஈழத்தில் வசிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாகவும்,  தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும், தங்களுடன் வசிக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.