பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக-வை ஆட்சியை விட்டு அகற்றும் வரை காலணி அணியப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக அரசைக் கண்டித்து நாளை காலை 10 மணிக்கு தனக்கு தானே சாட்டையால் அடித்துக் கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த திருமாவளவன், “லண்டன் சென்று திரும்பிய பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது என்று புரியவில்லை” என்று கூறினார்.
“தன்னைத்தானே வருத்திக்கொள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை கையிலெடுக்காமல் தன்னைத் தானே சவுக்கால் அடித்துக்கொள்வதாக கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது” என்றும் தெரிவித்தார்.
அண்ணாமலையின் இந்த போராட்ட அறிவிப்பு நகைப்புக்குரியதாக மாறிவிடக்கூடாது என்றும் திருமாவளவன் கூறினார்.