பெங்களூரு:

ற்போதைய சூழ்நிலையில் தனக்கு பிரதமராகும் எண்ணம் இல்லை என்ற கூறிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, ராகுல் பிரதமரானால் அவர் அருகில் அமர்வேன் என்று கூறி உள்ளார்.

கர்நாடகாவில், காங்கிரஸ் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தற்போது தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது.  மாண்டியா மாவட்டத்தில்  உள்ள ஹசன் தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் தரப்பில் நடிகர் அம்பரீஷ் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நிலையில்,  அவரது மறைவை தொடர்ந்து அந்த தொகுதியை தேவகவுடா தனது கட்சிக்கு வாங்கிக் கொண்டார்.

அங்கு போட்டியிட தேவகவுடாவின் தேவ கவுடாவின் மூத்த மகன் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல், குமாரசாமி யின் மகன்  நிகில் குமார சாமி ஆகிய இருவரும் ஹசன் தொகுதியை கேட்டு பிடிவாதம் பிடித்தனர். இதில், ரேவண்ணாவின் மகனுக்கு ஹசன் தொகுதியை தேவகவுடா ஒதுக்கி உள்ளார். இதனால் அவரது குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், பின்னர் குமாரசாமி மகன் நிகில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது, பொதுக்கூட்டத்தில் பேசிய  தேவகவுடா , நான் இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன். இனி தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். அரசியலில் இருந்து ஓய்வு பெறவும் யோசித்து வருகிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

ஆனால், பின்னர் அவரது குடும்பம் மற்றும் கட்சியில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக தும்கூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். தற்போது தீவிர களப்பணியாற்றி வரும் தேவகவுடா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தற்போதைய நிலையில், அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம்  இல்லை என்று அதிரடியாக அறிவித்த முன்னாள் பிரதமர் தேவகவுடா, சில சூழ்நிலைகளால், மீண்டும் போட்டியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது என்று கூறினார்.

மேலும், பிரதமராக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தனக்கு இல்லை என்றவர், ராகுல், பிரதமரானால், அவருக்கு அருகில் அமர தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.