சிகாகோ :

மெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழக துணைமுதல்வர்  சிகாகோவில் நடைபெற்ற விழாவில் து ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் – ஆசியா’ விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய துணைமுதல்வர் ஓபிஎஸ் மகன், தான் நரேந்திர மோடியின் நாட்டில் இருந்து வந்துள்ளேன் என்று பேசினார். தமிழகத்தின் தொழில்வளர்ச்சிக்காக அமெரிக்காவில் அரசு சார்பில் சுற்றுப்பயணம்  துணைமுதல்வரின் மகன் ரவீந்திர நாத்தின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக எம்.பி.யான ரவீந்திரநாத், தான் தமிழகத்தில் இருந்து வந்திருப்பதாக சொல்வதை விட்டு விட்டு, தான் மோடியின் நாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்று கூறி இருப்பது,   அதிமுக சிறிது சிறிதாக பாஜகவாக கலர் மாறி வருவதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

ரவீந்திரநாத் பேசும் வீடியோ…

 

 

10நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் மற்றும் அதிகாரிகள் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்துகொண்டு வருகின்றனர்.  நியூயார்க்கில் பயணம் மேற்கொண்ட ஓபிஎஸ் சிகாகோவுக்கும் சென்றார்.

அங்கு   சிகாகோ உலக தமிழ்ச்சங்கம் சார்பாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொண்டார். 10வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தியதையொட்டி அவரை கவுரவித்து ’தங்க தமிழ் மகன்’ விருது வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து  நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில், ஓபிஎஸ்சுக்கு  ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் – ஆசியா’ விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ரவீந்திரநாத், தமிழகத்தை பற்றியோ, தமிழக வளர்ச்சி பற்றியோ  கூறாமல், பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். இது அங்கிருந்த தமிழர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சிகாகோவைத் தொடர்ந்து 13, 14 தேதிகளில் வாஷிங்கடனில் நடைபெற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றபின் 17ஆம் தேதி அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறார் ஓபிஎஸ்.