கலிஃபோர்னியா
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி தாம்தான் அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் எனத் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் மோடியின் பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. எனவே மக்களவை எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தற்போது ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு 10 நாட்கள் சுற்றுப்பயணமாகச் சென்றுள்ளார். இதில் ஒரு பகுதியாக அவர் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றி உள்ளார்.
ராகுல் காந்தி தனது உரையில், “அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் நான் தான். நான் அரசியலில் இணைந்த போது மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவேன் என கற்பனையில் கூட நினைத்துப் பார்க்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.