போபால்: கொஞ்ச காலம் ஓய்வெடுக்க தயார் என மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான கமல்நாத் திடீரென அறிவித்து உள்ளார். மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பேரணியில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 230  கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவை. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு 114 இடங்களும், பாஜகவுக்கு 109 இடங்களும்  கிடைத்துள்ளன. இது தவிர சுயேச்சைகள் 4, பகுஜன் சமாஜ் கட்சி 2 மற்றும் சமாஜ்வாதி கட்சி 1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் 15ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு மூடுவிழா நடத்தி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.

ஆனால்,  ம.பி. முதல்வர் பதவிக்கு ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கமல்நாத் ஆகிய இருவரும் போட்டியிட, காங்கிரஸ் தலைமை சமரசம் பேசி, கமல்நாத்தை முதல்வராக அமர்த்தியது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே பூசல் நீடித்து வந்தது. இதன் பாதிப்பு கடந்த மார்ச் (2020, மார்ச்)  மாதத்தில் வெளிப்பட்டது. துணைமுதல்வர் சிந்தியா உள்பட, 6 அமைச்சர் கள் உள்பட 22 எம்எல்ஏக்கள்எம்.எல்.ஏ.க்கள கமல்நாத் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.  இதனால் அங்கு கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தது.

இதையடுத்து,  நடைபெற்ற இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை. இதனால், சலசலப்பு நீடித்து வந்தது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் சிந்த்வாராவில் நடந்த காங்கிரஸ் கட்சியின்  பேரணியில் கலந்துகொண்ட மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, ‘கொஞ்சம் ஓய்வு எடுக்க நான் தயாராக இருக்கிறேன்’ என்றவர்,  தனக்கு,. எந்தவொரு பதவி மீதும், எந்தவிதமான லட்சியங்களும் பேராசைகளும் இல்லை,  நான் ஏற்கனவே நிறைய சாதித்துள்ளேன், அதனால் கொஞ்ச காலம்  நான் வீட்டில்  ஓய்வு எடுக்க தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.

மூத்த தலைவராக கமல்நாத்தின் இந்த அறிவிப்பு மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.