சென்னை:
ரஜினி, கமலை தொடர்ந்து நடிகர் விஷால் அரசியலில் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் விஷால் கூறுகையில், ‘‘ஆர்.கே.நகரில் நான் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட அடுத்த நிமிடமே நான் முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், மக்களில் ஒருவனாக இதை கூறுகிறேன். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றனர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அவர்களது கொள்கைகளை தெரிவிக்கவில்லை.அதுவரை காத்திருக்க வேண்டும் ரஜினியிடம் இருந்து இன்னமும் நிறைய எதிர்பார்க்கிறேன். அவரது அடுத்தடுத்த முடிவுகள் என்ன என்பதை அறிய ஆவலாகவே இருக்கிறேன்’’ என்றார்.
Patrikai.com official YouTube Channel