சென்னை: “அன்புமொழியை பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்” என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் அன்புமொழியை – ஒற்றுமைமொழியைப் பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது. இது குறித்து உலக நாடுகளுக்கு விளக்க கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டு உரையாற்றி வருகின்றனர். ஸ்பெயினில் பேசிய கனிமொழி, அங்கிருந்த ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை”  என கூறியது பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஸ்பெயின் மண்ணில், “இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை” என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் – உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை கனிமொழி எம்.பி.யை வாழ்த்தினேன்.

ஸ்பெயின் மண்ணில், “இந்தியாவின் தேசிய மொழி #UnityInDiversity” என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் – உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை @KanimozhiDMK MP அவர்களை வாழ்த்தினேன்!

இந்திய நாட்டுக்கான குரலாகத் தமிழ்நாட்டின் அன்புமொழியை – ஒற்றுமைமொழியைப் பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்”! இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.