டில்லி

லித்துக்களை சுத்தப்படுத்த நான் ஸ்ரீராமர் இல்லை எனக் கூறி சமபந்தி விருந்தில் கலந்துக் கொள்ள மத்திய அமைச்சர் உமாபாரதி மறுத்துள்ளார்.

நாடெங்கும் தற்போது தலித்துக்களுடன் பாஜக தலைவர்கள்  கலந்துக் கொள்ளும் சமபந்தி விருந்து தொடர்ந்து நடைபெறுகிறது.   பாஜகவின் தலைமை அவ்வாறு நினைத்தாலும் பல மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் இதற்கு நேர்மாறாக நடந்துக் கொள்கின்றனர்.  உ. பி.   அமைச்சர் ஒருவர் தலித் வீட்டில் சமைத்த உணவை சாப்பிடாமல் வெளியில் இருந்து வாங்கி வந்து சாப்பிட்ட தகவல் நேற்று வெளியானது.

உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பிரதாப் சிங், “பாஜக அமைச்சர்கள்  தலித் மக்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை புனிதப்படுத்துகின்றனர்.  அவர்கள் ஸ்ரீ ராமருக்கு ஒப்பானவர்கள்.   தலித்துக்கள் அவர்களின் இந்த செயலுக்காக புண்ணியம் செய்திருக்க வேண்டும்” என கருத்து தெரிவித்திருந்தார்.

தெற்கு டில்லி பகுதியில் நடைபெற்ற ஒரு சமபந்தி விருந்தை மத்திய அமைச்சர் உமாபாரதி தொடங்கி வைத்தார்.   ஆனால் அங்கு உணவு அருந்த அவர் மறுத்து விட்டர்.  அதற்கு அவர், “தலித்துக்களை சுத்தம் செய்ய நான் ஸ்ரீ ராமர் இல்லை.   நான் என்றுமே என்னை ஸ்ரீ ராமர் அளவுக்கு உன்னதமாக நினைத்தது இல்லை.  நான் என் வீட்டுக்கு தலித்துக்களை அழைத்து என் கையால் உணவு பரிமாறவே விரும்புகிறேன்” எனக் கூறி உள்ளார்.