புவனேஸ்வர்
ஒரிசா மாநிலத்துக்கு சேவை செய்யவே விரும்புவதாகவும் தேசிய அரசியல் ஆசை இல்லை எனவும் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்
ஒரிசா மாநில முதல்வர் நவீன்பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் ஆவார். நடைபெற்று வரும் மக்களவை தேர்தலுடன் ஒரிசா மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. நவீன் பட்நாயக் செய்தி ஊடகமான இந்தியன் எக்ஸ்பிரசுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
பேட்டியின் விவரம் வருமாறு :
நான் கடந்த 1997 முதல் பலமுறை தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறேன். ஒவ்வொரு தேர்தலுமே மாறுபட்டவைகள் தான். ஆனால் அடிப்படை கொள்கை மற்றும் திட்டங்களில் எந்த மாறுதலும் இருப்பதில்லை. இந்த தேர்தல் எனக்கும் மோடிக்குமான போட்டி கிடையாது. குடியரசு என்பது தலைவர்களை பொறுத்து முடிவு செய்யபடுவது இல்லை. எங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத் திட்டங்களால் வறுமை நிறைந்திருந்த ஒரிசா மாநிலம் வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளது.
ஒரிசா அரசு நிலமற்ற ஏழை விவசாயிகள் நலனுக்காக அறிவித்த காலியா திட்டத்தையும் மத்திய அரசு அளிக்கும் விவசாயிகள் உதவித் தொகை திட்டத்தையும் வைத்து பலர் குழபம் டிந்துளனர். இரண்டும் வேறு வேறு வகையான திட்டங்களாகும். இதனால் ஒரிசா விவசாயிகள் பெருமளவில் பிஜு ஜனதா தளத்துக்கு வாக்களிப்பார்கள்.
மத்திய பாஜக அரசின் மீது ஒரிசா மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஒரிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக 2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பாஜக அறிவித்தது. ஆனால் அதை நிறவேற்றவில்லை. மாறாக ஒவ்வொரு 3 வருடத்திலும் மாற்றப்பட வேண்டிய நிலக்கரி மானியமும் உயர்த்தப்படாமல் உள்ளது. இதனால் மாநிலத்தில்கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் ஏமாந்துள்ளனர்.
இந்த ஏமாற்றம் நாடெங்கும் உள்ளது. அதனால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது. அது மட்டுமின்றி மத்தியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை. இதனால் பிரதமர் பதவிக்கு கடும் போட்டி உண்டாகும். என்னை பொறுத்தவரை எனக்கு ஒரிசாவுக்கு மட்டுமே சேவை செய்ய ஆசை உள்ளது. தேசிய அர்சியலில் எனக்கு ஆர்வம் கிடையாது. ஒரிசா மாநில முன்னேற்றத்துக்கு துணை போகும் கட்சிக்கு மத்தியில் நாங்கள் ஆதரவு அளிப்போம்” என தெரிவித்துள்ளார்