சோளிங்கர்:
அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல என்று கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் களைகட்டி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளர்கள் உள்பட கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இன்று அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகனக்கு ஆதரவாக பரப்புரை செய்து வருகிறார்.
அரக்கோணம் அடுத்த சோளிங்கரில் பிரசாரம் செய்த ஸ்டாலின், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என அண்ணா கூறியுள்ளார் என்று கூறியவர், நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்லது என்று எதிர்க்கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள் என்று குற்றம் சாட்டியவர், நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. இந்து மதம் மட்டுமல்ல. எந்த மதத்திற்கும் நாங்கள் எதிரி கிடையாது என்று கூறியவர், என் மனைவி கோயிலுக்கு செல்வதை நான் தடுத்ததில்லை என்றும், கோயில்கள் கூடாது என்பது திமுகவின் கொள்கை அல்ல. அது கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்பதுதான் திமுகவின் கொள்கை என்று கூறினார்.
மேலும், தமிழக மக்களுக்கு உதவும் கரமாக திமுக தலைவர் கலைஞர் இருந்தார்; ஆனால் தற்போது எடப்பாடி உதவாத கரமாக இருந்து வருகிறார் என்று சாடியவர், நாடாளுமன்ற தொகுதிகிளலும், 18 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுகவை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று மக்களிடம் கோரிக்கை வைத்தார்.
தற்போது அதிமுக தலைமையில் உள்ள கூட்டணி கொள்கையற்ற கூட்டணி என்று கூறியவர், . பேரத்தின் அடிப்படையில் தேர்தல் கூட்டணி என்றும், வன்முறை கட்சி பாமக என்றும், அவர் களின் வேலையே பேருந்துகளை கொளுத்துவது, பாலங்களை தகர்ப்பதுதான் என்று சட்டசபையில் ஜெயலலிதா கூறினார். அந்த கருத்துக்கள் இன்றும் அவைக்குறிப்பில் இருக்கிறது என்றவர், வன்னியர்களின் 87 சொத்துக்களை காப்பாற்றியவர் கருணாநிதி என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர், தேர்தல் நேரத்தில் துரைமுருகன் மகன் வீட்டில் சோதனை நடத்துகிறார்கள். திமுக பிரசாரத்தை தடுக்கவே எங்கள் கட்சி நிர்வாகிகள் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுகிறது. மிசா, பொடா சட்டங்களையே பார்த்தவர்கள் நாங்கள். இதற்கெல்லாம் திமுக அஞ்சாது.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
ஸ்டாலின் இன்றைய சோளிங்கர் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக இதுவரை, இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போதுகூட எழும்பூர் தொகுதி வேட்பாளருக்கு வாக்கு கேக்க சென்றபோது, அந்த பகுதியில் உள்ள கோவிலில் வாக்கு சேகரித்தார். அப்போது, கோவிலை சேர்ந்த ஒருவர் குங்குமம் ஸ்டாலினுக்கு வைத்து விட்டார். அந்த இடத்தை கடந்ததும், ஸ்டாலின் தனது கைக்குட்டையால் குங்குமத்தை அழிக்க தொடங்கினார். முழுமையாக அழியும்வரை மீண்டும் மீண்டும் கர்ஃசீப்பால் அதை துடைத்தார். இது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது தான் இந்துக்களுக்கு எதிரி அல்ல என்று பேசியிருப்பது, அவரது கொள்ளையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.