டில்லி

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் கம்பீர் மணிப்பூர் விவகாரம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை மாற்றுச் சமூகத்தினர் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

டில்லியில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர், மணிப்பூர் சம்பவம் குறித்து வேதனையுடன் பேசினார்.

அவர்,

“இது மிகவும் வெட்கக்கேடானது. இந்த பிரச்சினை மணிப்பூருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதால், என்னை ஒரு இந்தியன் என்று சொல்லிக்கொள்வதில் நான் வெட்கப்படுகிறேன். இது ஒட்டுமொத்த நாட்டின் தலையையும் தாழ்த்தியுள்ளது, எனவே இதை அரசியலாக்கக்கூடாது.

மணிப்பூர் விவகாரத்தில் அரசியல் செய்யப்படுகிறது. ஆனால் இது மாநிலம் சார்ந்த சம்பவம் அல்ல. முழு நாட்டிற்கும் அவமானம். ஒரு இந்தியனாக நாம் அவமானத்தில் தலை குனிய வேண்டும். மணிப்பூரில் நடந்த சம்பவம் போல் எதிர்காலத்தில் எந்த மாநிலத்திலும் நடக்கக்கூடாது.

மணிப்பூர் விவகாரத்தில் அரசியல் செய்யப்படுகிறது. ஆனால் இது மாநிலம் சார்ந்த சம்பவம் அல்ல. முழு நாட்டிற்கும் அவமானம்”

என்று தெரிவித்துள்ளார்.