தமிழ் திரைத்துறையினரால் கிளப்பப்பட்ட ‘இந்தி தெரியாது போடா’ என பொறிக்கப்பட்ட டி-சர்ட் புரட்சி கடந்த ஐந்து நாட்களாக ட்விட்டரில் பிரபலமாகி வருகிறது.

இதற்கு ஆதரவாக பலரும் , இது தவறான முன்னுதாரணம் என சிலரும் வாதம் செய்து வருகின்றனர் .

இந்நிலையில் நான் ஒரு தமிழ் பேசும் இந்தியன் என்ற டி-சர்ட் வாசகம் தமிழகத்தில் வைரலாகி வருவதை போல் கர்நாடக மாநிலத்திலும் நான் கன்னடம் பேசும் இந்தியன் என்ற டி-சர்ட் அணிந்து நடிகர்கள் பிரபலபடுத்தி வருகின்றனர்.

கன்னட நடிகர் சிவராஜ்குமார், சேத்தன், தனஞ்சயா ஆகியோர் நான் கன்னடம் பேசும் இந்தியன், கர்நாடகாவில் கன்னடமே தேசிய மொழி என்ற டி-சர்ட் அணிந்து போஸ் கொடுக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனால் தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் இந்திக்கு எதிரான முழுக்கம் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.