புதுடெல்லி: நான் ஒரு பிரமாணன். என்னால் காவல்காரராக இருக்க முடியாது. அதுதான் உண்மையும்கூட என்று சாதிய தத்துவம் பேசியுள்ளார் பாரதீய ஜனதாவின் சுப்ரமணிய சாமி.
ஒரு தமிழ் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த அவர் கூறியிருப்பதாவது, “என்னால் என் பெயருக்கு முன்னால் காவல்காரர் என்ற அடைமொழியையெல்லாம் போட்டுக்கொள்ள முடியாது.
அது சாத்தியமுமல்ல. ஏனென்றால் நான் ஒரு பிராமணன். இதுதான் உண்மை. ஒரு காவல்காரர் என்ன வேலை செய்யவேண்டுமென உத்தரவிட மட்டுமே என்னால் முடியும். அதைத்தான் இந்த சமூகம் எதிர்பார்க்கிறது” என்றுள்ளார்.
தன்னை ஒரு காவல்காரராக வரித்துக்கொண்டு, ஊழல், தப்பெண்ணங்கள் மற்றும் சமூக தீமைகளை எதிர்த்துப் போராடும் அனைவருமே காவல்காரர்கள்தான் என்ற கோஷத்தோடு, பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ள நிலையில், சுப்ரமணியசாமி தனக்கேயுரிய சர்ச்சையான பாணியில் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
– மதுரை மாயாண்டி