டெல்லி:

குந்த மருத்துவர் பரிந்துரையின்றி ஹைட்ராக்சி குளோரோகுயினை உட்கொள்ளக்கூடாது என்றும், மருந்து கடைகள் விற்பனை செய்யக்கூடாது என்றும் மத்திய சுகாதாரத்துறை அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் நோய்கு இதுவரை  தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு மலேரியாவுக்கு கொடுக்கப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை வழங்கப்படுகிறது.  இதை பெரும்பாலான நாடுகள் பரிந்துரைத்து வருகின்றன. இந்த மருந்து உட்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

உலகளவிலான சப்ளையில் 70 சதவீத ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 20 கோடி மாத்திரைகளை இந்தியாவில் தயார் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தடுப்புக்காக அமெரிக்க உள்பட பல நாடுகளுக்கு இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயினை ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்த நிலையில்  கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளை, பொது மக்களுக்கு தகுந்த மருந்துவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக   மத்திய சுகாதார அமைச்சகம் டிவிட்டரில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பரிந்துரைப்படி வழங்கப்பட வேண்டிய மருந்து, இதனை மருத்துவர் பரிந்துரையின்றி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருப்பதுடன்,

இம்மருந்து எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட பிற நோயாளிகள், கொரோனா பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த வீட்டு உறுப்பினர்களுக்காக போதுமான அளவு ஹைட்ராக்சி குளோரோகுயின் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இம்மருந்து அவர்களுக்கானது மட்டும் தான்.

பிற பொதுமக்களுக்கு தேவையில்லை. மருத்துவர் பரிந்துரையின்றி சுயமாக இம்மருந்தை எடுத்துக்கொண்டால் மோசமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

இவ்வாறு அதில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.